கொரோனா தொற்றிலிருந்து தொழிலாளர்களை பாதுகாக்க சுகாதார உபகரணங்கள்கையளிப்பு.

(க.கிஷாந்தன்)

தோட்டங்களில் கொரோனா தொற்று பரவுவதனை தடுக்கும் முகமாக தோட்ட நிர்வாகங்களுக்கு கொரோனா தொற்று நீக்கி, மருந்து, முகக் கவசம், கொரோனா பாதுகாப்பு உடை, உடல் வெப்பானி அளத்தல் கருவி ஆகியன உபகரணங்கள் கையளிக்கும் நிகழ்வு அட்டன் டிக்கோயா தோட்டத்தில் அமைந்துள்ள சுகாதார மையத்தில் நடைபெற்றது.

குறித்த தோட்டத்தில் வேலை செய்யும் தோட்டத்தொழிலாளர்களுக்கு முகக்கவசம், தொற்றி நீக்கி, ஆகியனவும் இத்தோட்டத்தில் கொரோனா தொற்று நோய் பரவுவதனை தடுப்பதற்காக சுயேட்சை குழுவாக உருவாக்கப்பட்ட  ஆண் பெண் 25 பேர்  அடங்கிய கொரோனா தடுப்பு செயலணிக்கு கோரோனா தடுப்பு உடைகள் ஆகியனவும் வழங்கி வைக்கப்பட்டன.

இதன் போது ஒரு தோட்டத்தொழிலாளக்கு ஒரு சோடி முகக்கவசம் மற்றும் ஒரு சோடி தொற்று நீக்கி மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டதுடன், பொது இடங்கள் தொற்று நீக்கம் செய்வதற்கான மருந்துகளும் இதன் போது தோட்ட முகாமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டன.

நியாய வர்த்தக சர்வதேச அமைப்பு இதற்கான  அனுசரனை வழங்கியிருந்தன.

இதன் போது டிக்கோயா தோட்டத்தில் ஐந்து பிரிவிகளிலுமிருந்து தெரிவு செய்யப்பட்டு உருவாக்கப்பட்ட கொரோனா தடுப்பு செயலணி செயப்படுவது தொடர்பான பயிற்சிகளை அம்பகமுவ வைத்திய சுகாதாரி அதிகாரி பிரதேச மேற்பார்வை சுகாதார பரிசோதகர் எஸ் காமதேவன் இவர்களுக்கான பயிற்சிகளை பெற்றுக்கொடுத்ததுடன் ஆலோசனை வழிகாட்டல்களையும் பெற்றுக்கொடுத்தார்.

இந்த செயல் திட்டம் 23 தேயிலை தோட்டங்களிலும் இரண்டு பூந்தோட்டங்களிலும், 16920 தோட்டத்தொழிலாளர்களுக்கு முன்னெடுக்கப்பவுள்ளதாக நியாய வர்த்தக சர்வதேச அமைப்பின் திட்ட இணைப்பாளர் ஏ.அருள்செல்வன் தெரிவித்தார்.

டிக்கோயா தோட்ட முகாமையாளர் ஹிரான் ஹேரத் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு தோட்ட வைத்தியர் ஞானவந்தன், கிராம சேவகர், சுகாதார துறைசார்ந்தவர்கள் என பலரும் கலந்து கொண்டணர்.