வெருகல் பிரதேச இளைஞர் சம்மேளனத்தின் புதிய நிருவாகம்

பொன்ஆனந்தம்

 வெருகல் பிரதேச இளைஞர் சம்மேளனம் கலைக்கப்பட்டு இவ்வருடத்திற்கான புதிய  பிரதேச சம்மேளனம் தெரிவு செய்யப்பட்டு உள்ளது

வெருகல் பிரதேச செயலக மண்டபத்தில்  இதற்கான தெரிவு நிகழ்வு நடைபெற்றது
பிரதேசத்தில் உள்ள சகல கழகங்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கு பற்றி யிருந்தனர்
    இக் கூட்டத்தில் பிரதம விருந்தினர்களாக  ,  வெருகல் பிரதேச உதவி பிரதேச செயலாளர், வெருகல் பிரதேச இளைஞர் சேவைகள் மன்ற  அதிகாரி,திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற உதவி பணிப்பாளர், ஆகியோர் கலந்து கொண்டு அறிவுரை களை வழங்கி வைத்தனர்
திருகோணமலை  மாவட்ட இளைஞர் சேவைகள் மன்ற  தொழில் வழிகாட்டல் ஆலோசகர் , வெருகல் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்  போன்றவர்களும் கலந்து கொண்டனர்