மட்டக்களப்பு உதயம் விழிப்புணர்வு மன்றத்தின் உறுப்பினர்களின் வாழ்வாதார உதவிக்கான காசோலை

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு
மட்டக்களப்பு உதயம் விழிப்புணர்வு மன்றத்தின் உறுப்பினர்களின் வாழ்வாதார உதவிக்கான காசோலை கையளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு கரடியனாறு மகா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது .
மட்டக்களப்பு சமூக விழிப்புணர்வு மன்றத்தின் தலைவர் பொன் மனோகரன் தலைமையில் கரடியனாறு மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில் உதயம் விழிப்புணர்வு மன்றத்தின் உறுப்பினர்களின் வாழ்வாதார அபிவிருத்திக்காக உதயம் விழிப்புணர்வு மன்றத்தின் தலைவர் மா .கிருஷ்ணகுராமரிடம் 2, 000 000 ரூபா பெறுமதியான காசோலை கையளிக்கப்பட்டது
லங்கா ஹெல்ப் அறக்கட்டளை நிறுவனத்தின் அனுசரணையில் இந்த 2, 000 000 ரூபா நிதியினை வழங்கி வைக்கப்பட்டுள்ளது .
இந்நிகழ்வில் மட்டக்களப்பு கரடியனாறு மகா வித்தியாலய அதிபர் ஆர் .செந்தில்நாதன் உட்பட சமூக விழிப்புணர்வு மன்றத்தின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்