மட்டக்களப்பு தேற்றாத்தீவு வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

கனகராசா சரவணன்_-
மட்டக்களப்பு தேற்றாத்தீவு கடற்கரையில் அண்டிய வாவிபகுதியில்  ஆண் ஒருவர் சடலம் அடையாளம் காணப்படாத நிலையில் இன்று வெள்ளிக்கிழமை (08) கரையொதுங்கியுள்ள நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிக்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் நபர் சுமார் 60 வயதுமதிக்கத்தக்கவர் எனவும் அடையாளம் இதுவரை கணப்படவில்லை எனவும் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதக பொலிசார் தெரிவித்தனர்.