கிளிவெட்டியில் இரவோடு இரவாகஅன்ரிஜன் பரிசோதனை ஒருவருக்கு தொற்று

பொன்ஆனந்தம்
மூதூர் கிளிவெட்டி பகுதியில் வியாழன் இரவு செய்யப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் ஒருவர் தொற்றாளராக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மூதூர் பொது ச்சுகாதார வைத்திய அதிகாரி என். எம். எம். கசாலி தெரிவித்தார்

மாகாண, மற்றும் பிராந்திய சுகாதார திணைக்களங்கள்களின் ஆலோசனையின் பேரில் இத்திடிர் சோதனை 40பேருக்கு இரவிரவாக செய்யப்பட்டது.
ஒரு குறிப்பிட்ட  நிறுவன (ஆபத்து குழுவாக இனங்கானப்பட்ட) ஊழியர்கள்  40 (Rapid Antigen Test) பேருக்கு பரிசோதனை கள் செய்யப்பட்டதில் பருத்தித்துறையை சேர்ந்த ஒரு நபர் தொற்றாளராக இனங்காணப்படார் என வைத்தி ய அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.