சஜித்தை இந்தியாவுக்கு அழைத்த ஜெயசங்கர்.

இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர் சுப்பிரமணியம் ஜெயசங்கர் இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் செய்ய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு சிறப்பு அழைப்பு விடுத்துள்ளார்.

சஜித் பிரேமதாசாவுடன் கடந்த புதன்கிழமை நடைபெற்ற  சிறப்பு சந்திப்பின்போதே இதனை தெரிவித்தார்.  இச்சந்திப்பில் இருதரப்பு உறவுகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால வரலாற்று உறவுகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் இலங்கை மக்களுக்கு வீடுகள் கட்டியமைக்கு இந்திய அரசு அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.,