கிழக்கில் 09வது கொவிட் மரணம் பதிவு.

(எம் எம் ஜெஸ்மின்)

கிழக்கு மாகாணத்தில் சற்றுதுன் 09வது மரணம் பதிவாகியுள்ளது. மரணமடைந்தவர் அம்பாறை உகண சுகாதாரப்பிரிவைச்சேர்ந்த கிந்துருவாவ கிராமத்தைச்சேர்ந்த 45 பெண் என பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல். என் லியனகே சுபீட்சத்துக்கு தெரிவித்தார்.

மரணமடைந்தநோயாளி சிறுநீரக குருதி மாற்று நோயாளி எனவும்  இவரது சடலம் தற்போது  கோமாகம வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த சுகாதார வைத்திய அதிகாரி  இன்று மட்டும் உகண பிரதேசத்தில் ஏழுபேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் இதுவரை உகணப்பிரதேசத்தில்  25பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மேலும் தெரிவித்தார்