மட்டக்களப்பில் இன்றும் 25 பேருக்கு. காத்தான்குடி 20

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 12 மணிநேரத்திற்குள் 25 பேருக்கு கொவிட் 19 தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

தொற்று அடையாளப்படுத்தப்பட்டவர்களில் 20பேர் காத்தான்குடி 03பேர் ஏறாவூர் வெல்லாவெளி 01 மட்டக்களப்பு 01 போன்ற சுகாதார வைத்திய அதிகாரிப்பிரிவைச்சேர்ந்தவர்கள்.

மட்டக்களப்பில் தொற்றுக்குள்ளானவர் மட்டக்களப்பு பெற்றோலியக்கூட்டுத்தாபன ஊழியர் எனவும் இவர் ஏற்கனவே தனிமைப்படுத்தலுக்குட்பட்டவர் எனவும் தெரிவித்தார்.