ஜனாதிபதியினால் மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட விஷேட கொரோனா தடுப்பு கண்கானிப்பு நடவடிக்கைகள் ஆரம்பம்

(சர்ஜுன் லாபீர்)

நாட்டில் வேகமாகப் பரவிவரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயும் கூட்டம் (07) வியாழக் கிழமை மு.ப 09.30 மணிக்குஇறக்காமம்  பிரதேச செயலக கேற்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் தலைமையில் நடைபெற்றது.

நாட்டில் அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் இராணுவத்துடன் இணைந்து அரச நிறுவனங்களின் வேலைத்திட்டங்களை முன்நகர்த்தல் மற்றும் சமூகத்தில் பரவியிருக்கும் அதிகரித்த போதைப்பாவனை, சமூக சீர்கேடுகள் தொடர்பில் இராணுவம் அரச நிறுவனங்களதும் மக்களினதும் பங்களிப்புடன் மேற்கொள்ளவுள்ள விஷேட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்பட்டது.

ஜனாதிபதியினால் விஷேடமாக 25 நிருவாக மாவட்டத்திற்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பில் கண்கானிப்பதற்கு அம்பாரை மாவட்டத்தில் தெஹியத்தக்கண்டி தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்காக நியமிக்கப்பட்டுள்ள அக்கரைப்பற்று 241 வது இராணுவ படைப்பிரிவின் கட்டளைத் தளபதி கொமான்டர் பிரிகேட் ஜானக விமலரட்ன அவர்களின் விஷேட பங்கேற்புடன் இக்கூட்டம் நடைபெற்றது.

இறக்காமம் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இக் கூட்டத்திற்கு உதவிப் பிரதேச செயலாளர் திருமதி நஹீஜா முஸப்பிர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர். ஏ.சி.எம். ஹம்சார், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் ஏ.சி.எம். தஸ்லீம், கிராம சேவக நிருவாக உத்தியோகத்தர் திரு. ஹெசேரத் பண்டார ஆகியோரும் கலந்தி கொண்டனர்.

மேலும் அக்கரைப்பற்று 241 வது இராணுவ படைப்பிரிவின் சிவில் விவகார பொறுப்பதிகாரி லெப்டினன் கேனல் புஷ்பசிறி, நீத்தை இராணுவ முகாம் கட்டளைத் தளபதி மேஜர் தம்மிக வீரசிங்க,
இறக்காமம் இராணுவ முகாம் கட்டளைத் தளபதி மேஜர் மஹேஷ் அத்தநாயக்க ஆகியோரும் பங்கேறதோடு பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ. ரஹுமான் உற்பட கிராம சேவை உத்தியோகத்தர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.