கிழக்கில் மேலும் ஒரு மரணம் மொத்தம் 08.

கல்முனைப்பிராந்தியம் நாவிதன்வெளிப்பிரதேசத்தில் கொரனா தொற்றினால் ஒருவர் மரணமடைந்துள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார  பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

நாவிதவன்வெளி மத்திய முகாமைச்சேர்ந்த  ஆணொருவர் அம்பாறை பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கண்டி பெரியாஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார். தற்போது கிழக்கில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளது.

இதேவேனை இன்று கிழக்கில் புதிதாக 38 தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர் இவர்களில் திருமலை மாவட்டத்தில் 03,  கல்முனைப்பிராந்தியம் 19, மட்டக்களப்பு 16 என  இனம் காணப்பட்டுள்ளதாக பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.