முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப் பிணையில் விடுதலை

எப்.முபாரக்

முன்னாள் பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அப்துல்லா மஹ்ரூப்  இன்று (06) பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

2015 முதல் 2019ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் லங்கா சதொசவுக்குச் சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்தியமை தொடர்பில் திருகோணமலை – கிண்ணியா பகுதியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் இவர் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையிலே இவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.