சஜித்தின் சர்வதேச மூத்த ஆலோசகராக தயான்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசாவின் மூத்த சர்வதேச உறவு ஆலோசகராக இலங்கையின் முன்னாள் தூதர் டாக்டர் தயான் ஜெயதிலக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் கீழ் ஜூன் 2007 முதல் அக்டோபர் 2009 வரை ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கையின் நிரந்தர பிரதிநிதியாக ஜெயத்திலக கடமையாற்றினார்.

டாக்டர் தயான் ஜெயதிலக கடந்த ஆண்டு வரை இலங்கையின் ரஷ்ய கூட்டமைப்பின் தூதராக இருந்தார். பிரான்ஸ் மற்றும் யுனெஸ்கோவுக்கான தூதராகவும் பணியாற்றியுள்ளார்.