நாம் சாப்பிட்டோமா? என்று கேட்பது கூட யாரும் இல்லை -ஆதங்கப்படும் கல்முனை மீனவர் சமூகம்

(ஏ.எல்.எம்.ஷினாஸ், றாசிக் நபாயிஸ்)   

கல்முனை நகர் பிரதேசத்திலுள்ள  11 கிராம சேவையாளர் பிரிவுகள் கடந்த 28ஆம் திகதி தொடக்கம்  இன்று வரை ஆறு நாட்களாக தனிமைப்படுத்தப்பட்டு பிரதேசமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன .

இந்நிலையில் தற்போது கல்முனை பிரதேச நாளாந்த கடற்றொழிலாளர்கள் தமது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டுகின்றனர்.

மீன் பிடிப்பதற்கான அனுமதி  உள்ள போதிலும் மீன் பிடிப்பதற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பிடிக்கப்படும் சிறுதொகை மீனை விற்பனை செய்ய முடியாதுள்ளது.  யாரும் இங்கு வரமுடியாது. இதனால் எமது வாழ்வாதாரம் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக நாம் நாளாந்தம் எதை சாப்பிடுகிறோம் என்றுகூட கேட்டதற்கு எவரும் இல்லை என மீனவர் சமூகம் தமது ஆதங்கங்களை வெளிப்படுத்துகின்றனர்.

கல்முனை பிரதேசம் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசமாக முடக்கப்பட்டுள்ளதை நாம் எதிர்கவில்லை. அது சுகாதார தரப்பினரது கடமை. அதை நாம் ஏற்றுக் கொள்கின்றோம். ஆனால் எமது தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. நாம் வருமானத்தை இழந்து வீதியோரத்தில் நிற்கின்றோம். எமது தொழிலை முன்னெடுத்து வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் அனுமதி தரவேண்டும் என மீனவர் சமூகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தேவையான பரிசோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து நாம் தொழிலுக்குச் சென்று எமது பிள்ளைகள் குடும்பம் வாழ்வதற்கு வழி விடுங்கள்… என்று சகல தரப்பினரையும் கேட்டுக்கொள்கின்றோம். இதற்கு ஜனாதிபதி மற்றும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தீர்வைப் பெற்றுத்தர வேண்டும் என்றும் இந்த மீனவர்கள் கோரிக்கை விடுத்தன