மட்டு மாவட்ட மக்களுக்கு மாகாண சுகாதாரப்பணிப்பாளரின் வேண்டுகோள்.

மட்டக்களப்பு நகரில் கொரனா தொற்றுக்குள்ளானவர்கள் பணியாற்றிய தற்போது மூடப்பட்டுள்ள வர்த்தக நிலையங்களுக்குச்சென்று பொருட்களை கொள்வனவு செய்தவர்கள் தானாக முன் வந்து அன்ரிஜன் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 தங்களையும் தங்கள் குடும்பத்தையும் மாவட்டத்தையும் பாதுகாக்க சம்பந்தப்பட்டவர்கள் தமது பிரதேச வைத்திய சுகாதார அதிகாரியிடம் தொடர்பு கொண்டு தங்களை அடையாளப்படுத்தி பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்தார்.

இதேவேளை நேற்று முன்தினம் ஆலையடிவேம்பு பிரதேசத்தைச்சேர்ந்த ஒருவர் மரணமடைந்துள்ளதுடன் கிழக்கில் மரணங்களின் எண்ணிக்கை 07ஆக அதிகரித்துள்ளதுடன் நேற்றுவரை கிழக்கில் 1230பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.