தம்பலகாமம் உல்பத்தை குளத்தில் நீர் கசிவு,கட்டுப்படுத்த இரானுவ வீரர்கள் களத்தில்

ஹஸ்பர் ஏ ஹலீம்_
தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவுகுட்பட்ட  உல்பத்தை  குளத்தில் ஏற்பட்டுள்ள நீர்கசிவினை நிறுத்தும்தொடர்நடவடிக்கையாக நேற்று  (02 )  நீர் கசிவினை கட்டுப்படுத்த இரானுவ வீரர்களின் உதவியினால் நடவடிக்கைகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டது. அண்மையில் ஏற்பட்ட அதிக மழை காரணமாக வெள்ளப்பெருக்கின் காரணமாக இக் குளத்தில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் குறித்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
 இதில்கமநல சேவைத் திணைக்கள தொழில்நுட்ப உத்தியோகத்தர், பிரிவிற்குரிய அபிவிருத்தி உத்தியோகத்தர்,விவசாய சம்மேளனம், கிராம அதிகாரி, பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர், தம்பலகாமம் பிரதேச  இராணுவ உயரதிகாரியும் உடனிருந்தார்கள்.