மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்றும் 08பேருக்கு கொவிட் 19 தொற்று.ஒலிப்பதிவு இணைக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 315பேருக்கு மேற்கொள்ளப்பட்ட றபிட் அன்ரிஜன் பரிசோதனையில் 08பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளானவர்கள் அனைவரும் காத்தான்குடி சுகாதாரப்பிரிவுக்குட்பட்டவர்கள்.

கடந்த 10நாட்களுக்குள் காத்தான்குடியில் 76பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். காத்தான்குடிபிரதேசம் தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ளதுடன் குறிப்பிட்ட  பிரதேசத்தில் தீவிரமான சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை மட்டு மாவட்டத்தில் 226பேர் தொற்றுக்குள்ளாகியதுடன் இருவர் மரணமடைந்துள்ளதாகவும் மட்டக்களப்பு மாவட்ட பிராந்தியப்பணிப்பாளர் நா.மயூரன் மேலும் தெரிவித்தார்.