2021 ஆரம்ப நிகழ்வும் சத்திய பிரமாணமும்.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக 2021ற்கான ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

மண்முனை தென்மேற்கு, பட்டிப்பளை பிரதேச செயலக புதிய ஆண்டின் ஆரம்ப நிகழ்வு இன்று (01) தேசிய கொடியேற்றலுடன் ஆரம்பமானது. பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு பின்னர் உத்தியோகத்தர்களின் சத்தியப்பிரமாணமும் இடம்பெற்றதை  தொடர்ந்து கொரோனா தொற்று தொடர்பில் பொது சுகாதார பரிசோதகரின் கருத்துரை வழங்கப்பட்டது.

சுபீட்சத்தை நோக்கிய பயணம் எனும் தொனிப்பொருளில் அமைந்த இன்றைய நிகழ்வில் மரநடுகையும் இடம்பெற்றது. இதன்போது உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.