ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் 2021ம் ஆண்டு புதுவருட பிறப்பின் முதன் நாள் நிகழ்வுகள்.

????????????????????????????????????

ஓட்டமாவடி பிரதேச செயலகத்தில் 2021ம் ஆண்டு புதுவருட பிறப்பின் முதன் நாளில் அரச உத்தியோகத்தர்கள் கடமை தொடர்பிலான சத்திய பிரமானம் செய்யும் நிகழ்வு செயகத்தின் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், நிருவாக உத்தியோகத்தர் அப்துல் ஹமீட், பதிவாளர் எம்.ஐ.மாஜிதீன், செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது தேசிய கொடி ஏற்றப்பட்டு, 2021ம் ஆண்டு புதுவருட பிறப்பின் முதன் நாளில் அரச உத்தியோகத்தர்கள் கடமை தொடர்பிலான சத்திய பிரமானம் செய்யப்பட்டது.

அத்தோடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சம் மிக்க நாடு என்ற தொலை நோக்கத்துக்கு அமைவாக மரக்கன்று நடும் திட்டத்தில் செயலக வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது.

பொதுமக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துகின்ற நிறுவனமாக பிரதேச செயலகம் இயங்கி வருகின்றது. எனவே செயலக உத்தியோகத்தர்கள் அர்ப்பணிப்புள்ளவர்களாக செயற்பட வேண்டும். சுபீட்சமான அபிவிருத்தியை நோக்கி செல்லும் இந்த நாட்டில் அர்ப்பணிப்புள்ளதாக எமது சேவை இருக்குமாக இருந்தால் எமது நாட்டையும், எமது பிரதேசத்தினையும் சுபீட்சமாக கொண்டு செல்ல முடியும் என்று ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா தெரிவித்தார்

????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????
????????????????????????????????????

.