வவுணதீவு எஸ்.சதீஸ் )
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை மேற்கு பிரதேசத்தில், பசுமை மீட்புப் புரட்சி எனும் தொனிப்பொருளில் ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வினை இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் ஆரம்பித்து வைத்தார்
இன்று ( 01.01.2021 ஆந் திகதி) “பசுமை மீட்பு பாசறை” முற்போக்குத் தமிழர்களின் ஏற்பாட்டில் வவுணதீவில் இடம்பெற்ற ஒரு இலட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில்
இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகர்,
அமைச்சரின் பிரத்தியேக செயலாளர்,
இணைப்புச் செயலாளர்கள், , முற்போக்குத் தமிழர் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள். ஆகியோர் கலந்துகொண்டருந்தனர்.
வவுணதீவு ஆயித்தியமலை பிரதான வீதியின் இரு மருங்கிலும் நிழல் தரும் மரங்கள் நடப்பட்டது.