தனிமைப்படுத்தல்– காத்தான்குடிபொலிஸ் பிரிவு என்ற தகவல் திணைக்கள தகவல் பிழையானது

காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி

ரீ.எல்.ஜவ்பர்கான்
இன்று அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள காத்தான்குடி பொலிஸ் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி பிழையானதாகும.காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவு என்பதே சரி என காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த நயணசிறி தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸ் பிரிவு என்பது ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவையும் மண்முனை வடக்கு பிரதேச செயலகப்பிரிவின் ஒரு பகுதியையும் உள்ளடக்குகின்றது.தற்போது தனிமைப்படுத்தப்பட்டிருப்பது காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவின் 18 கிராம சேவகர் பிரிவுகள் மாத்திரமே என அவர் மேலும் தெரிவித்தார்.