இஞ்ச பாருங்கோ  மட்டக்களப்பின் மக்கள் பிரதிநிதிகளுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

வருசம் பிறந்ததமுதல்முதல் இதை சொல்லக்கூடாதுதான் என நினைச்சேன். என்ன செய்வது எல்லாருடைய நன்மை கருதியும் இதை சொல்லத்தான் வேண்டும். இப்ப கொரனாக்காலம் நீங்க அங்க இஞ்ச என்று நிகழ்வுகளுக்கு போறிங்க தயவு செய்து கழுத்தில மாலைகளைப்போடாதீங்க.

 பூப்பறிப்பவருக்கும் , மாலைகட்டுபவருக்கும், மாலைபோடுபவருக்கும் சிலவேளை கொரனா இருக்கலாம் அந்தக் கொரனா உங்களுக்கும் வரலாம்? அது மட்டுமா நீங்கள் போட்ட உங்களுடைய மாலையை உங்கள் பின்னால் சுமந்து வருபவருக்கும் வரலாம் .மக்கள் பிரதிநிதிகளாகிய நீங்கள் மக்களுக்காக இந்த மாலை போடுகிற விசயத்தில கொஞ்சம் கவனம் எடுங்கோ.இதைரெலிபோனில சொல்வம் என்று உங்களுக்கு ரெலிபோன் அடிச்சாலும் தூக்கிறிங்க இல்லை.சொல்லனும் போல இருந்தது சொல்லியாச்சி.