முகநூல் ஊடாக அச்சுறுத்தியதாக முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் மீது முறைப்பாடு

பாறுக் ஷிஹான்

முகநூல் ஊடாக அவதூறு பரப்பியதாக முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் மீது கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் முகநூலில் பிரபல அரசியல் விமர்சகரும் வர்த்தக பிரமுகருமான எம்.எச்.எம் இப்ராஹீம் என்பவரை இணைத்து போலியாக இணைப்பு ஒன்றினை ஏற்படுத்தி குறித்த மாகாண சபை உறுப்பினர் தனக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளதாக இன்று(31) குறித்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த இணைப்பில் வெளிநாட்டு தூதுவர் ஒருவரை சந்தித்த புகைப்படத்தை உறுமாற்றம் செய்தி வேறு ஒரு நபரை இணைத்து களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக பாதிக்கப்பட்டவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு  குறித்த முகநூலில் தனக்கு அச்சுறுத்தல் விடுத்தவர் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸின்  முன்னாள் மாகாண சபை உறுப்பினர்  தவம் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.