சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டு கழக வருடாந்த பொதுகூட்டமும் புதிய நிர்வாக அலுவலர் தெரிவும்.

நூருள் ஹுதா உமர்

சாய்ந்தமருது விளாஸ்டர் விளையாட்டுக் கழக வருடாந்த பொதுகூட்டமும் புதிய நிர்வாக அலுவலர் தெரிவும் இன்று (31) இரவு சாய்ந்தமருதில் நடைபெற்றது.

நடப்பாண்டுக்கான வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பட்டு எதிர்வரும் காலத்தில் குறித்த விளையாட்டு கழகத்தினால் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் பிளாஸ்டர் பிரிமியர் லீக் தொடர்பிலான ஆலோசனைகளும் இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது. மேலும் சாய்ந்தமருது பிரதேச மைதானங்களில் உள்ள குறைபாடுகள், புதிய சீருடை அறிமுகம் தொடர்பிலும் கருத்தாடல்கள் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து புதிய நிர்வாக அலுவலர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.  தவிசாளராக வர்த்தகர் ஏ.எல். முகம்மத், தலைவராக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்தாத், பிரதித்தலைவராக வர்த்தகர் எம்.ஐ..எம். றிபாஜ், செயலாளராக வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர் ஏ.சி.எம். நிஸார், உதவி செயலாளராக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். றிஹான், பொருளாளராக அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.எம். முனாஸ், முகாமையாளராக வர்த்தகர் எம்.எல். பஸ்மீர் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டதுடன் கழகத்தின் பயிற்றுவிப்பாளராக அம்பாறை மாவட்ட கிரிக்கட் பயிற்றுவிப்பாளர் எம்.பி.எம். றஜாய் நியமிக்கப்பட்டார்.

விளையாட்டு கழக சிரேஷ்ட ஆலோசர்களாக பொது சேவை ஆணைக்குழு உறுப்பினர் சிரேஷ்ட நிர்வாகசேவை அதிகாரி ஏ.எல்.எம். சலீம், கெயார் கட்டுமான நிறுவன தலைவர் ஹிபத்துள் கரீம் ஆகியோரும் சட்ட ஆலோசகராக சட்டத்தரணி எஸ்.எல். ஹக்கீம் மற்றும் மருத்துவ ஆலோசகராக டாக்டர் ஏ.எம். வுஹையும் ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.