ஓட்டமாவடியில் மூன்று வீதிகள் முடக்கம். இன்றுஅன்டிஜன் பரிசோதனை

(எச்.எம்.எம்.பர்ஸான்)
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவுக்குட்பட்ட மூன்று வீதிகள் இன்று (31) தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

இன்று (31) ஓட்டமாவடி பிரதேசத்தில் கொரோனா தொற்றாளர்கள் ஏழு பேர் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து இவ் நடவடிக்கை சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாளை (1) குறித்த பகுதியில் எழுந்தமான முறையில் மேற்கொள்ளப்படவுள்ள பீ.சீ.ஆர்., அன்டிஜன் பரிசோதனைக்காக ஓட்டமாவடி – 2 ம் வட்டார கிராம சேகவர் பிரிவுக்குட்பட்ட பழைய மக்கள் வங்கி வீதி, எஸ்.எம்.ரீ.ஹாஜியார் வீதி, மௌலானா வீதி ஆகிய மூன்று வீதிகளுமே இவ்வாறு தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்று சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.