மாமூலை அந்தோனியார் ஆலய புதுவருட திருப்பலி

சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் அனைத்து ஆலயங்களிலும் 2021 ம் ஆண்டு புதுவருட திருப்பலி சிறப்புற இடம்பெற்றது

அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் மாமூலை அந்தோனியார் ஆலயத்தில் அருட்பணி பற்றிக் அமதி அடிகளாரால் புதுவருட நள்ளிரவு  திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது
இலங்கை அரசினால் பாதுகாப்புக்காக இராணுவத்தினர் ஆலயங்களை சூழ நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அனைத்து ஆலயங்களிலும் பாதுகாப்புக்காக விசேட பொலிஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது
இதேவேளை அண்மையில் இருவர் புதுக்குடியிருப்பில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்ட நிலையில் புதுக்குடியிருப்பு பகுதியில்  ஆலயங்களில் புதுவருட திருப்பலிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை   குறிப்பிடத்தக்கது