மாவடிமுன்மாரி சமுர்த்தி வங்கி தகவல்கள் கணணிமயப்படுத்தி வெளியீடு

மாவடிமுன்மாரி சமுர்த்தி வங்கி தகவல்கள் கணணியில் உட்புகுத்தி வெளியிடும் நிகழ்வு இன்று (30) இடம்பெற்றது.

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கடுக்காமுனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கி பிரிவிற்குட்பட்ட அனைத்து பயனாளிகள் தகவல்களும் Online முறைக்காக கணணிமயப்படுத்தப்பட்டு வெளியிடும் நிகழ்வு சமுர்த்தி வங்கி முகாமையாளர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது  மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ், கணக்காளர் ம.முகிலன், சமுர்த்தி தலைமை முகாமையாளர் குககுமாரன் அதிதிகளாக கலந்து கொண்டனர்.

இனிவரும் காலங்களில் மக்கள் தமது அனைத்து வங்கி நடவடிக்கைகளை போன்று செயற்பட்டு தமது சேவைகளை பெற்றுக்கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டது,