மட்டக்களப்பு கச்சேரியில் எவருக்கும் தொற்று இல்லை. பிராந்தியப்பணிப்பாளர் டாக்டர் நா.மயூரன்.

எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பணிஆற்றுகின்ற அதிகாரிகள் உத்தியோகத்தர்களுக்கு இன்று (31) எழுந்தமானமாக ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையென பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார். .

இன்று கடமைக்கு வந்துள்ளவர்களுக்கு மாத்திரம் எழுந்தமானமாக செய்யப்பட்டுள்ளது அம்பாறை மாவட்டத்தில் இருந்து உத்தியோகத்தர்கள் கொரோனா இரண்டாம் அலை உருவானதைத் தொடர்ந்து கடமைக்கு வருவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இன்நிலையில் இன்று முதல் காத்தான்குடியில் இருந்து வருகின்ற உத்தியோகத்தர்கள் ஐந்து தினங்களுக்கு தனிமைப்படுத்தல் ஊரடங்கு காரணமாக வரமுடியாத நிலையில் வீடுகளில் இருந்து வேலைகளை செய்வதற்கு பணிக்கப்பட்டுள்ளனர் என மாவட்ட  தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.