முள்ளியவளை நாவல்காடு பிரதேசத்தில் பாழடைந்த கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள்

சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவல்காடு பிரதேசத்தில் மரியாம்பிள்ளை என்பவருடைய தோட்டத்தில் கிடக்கின்ற மண்கிணறு ஒன்றில் மனித உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது

குறித்த பகுதிக்கு கால்நடைகளை பார்வையிடுவதற்காக வருகை தந்த தாயார் ஒருவர் குறித்த உடற்பாகங்கள் இருப்பதை அவதானித்து குறித்த பகுதி கிராம சேவையாளருக்கு  தகவல் வழங்கியுள்ளார்
இந்நிலையில் குறித்த பகுதிக்கு வருகை தந்த கிராம அலுவலர் குறித்த உடல் பாகங்கள் இருப்பதை பார்வையிட்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்
பொலிசார் குறித்த இடத்தில் வருகைதந்து உடலத்தை பார்வையிட்டதோடு  குறித்த  இடத்தில் போலீஸ் உடையிலோ ஆயுதம் தாங்கிய போலீசாரோ  இல்லாத நிலையில் சிவிலுடையில் குறித்த இடத்தில் போலீசார் இருக்கின்றனர்
குறித்த சிவில் உடையில் இருக்கின்ற நபர்கள் உடலம் இருக்கின்ற பகுதியை  புகைப்படம் எடுப்பதற்கும் ஊடகவியலாளர்களுக்கும் தடை விதித்துள்ளனர்