திருமலையில் 25,000 ஆயிரம் ஏக்கர் சோளச் செய்கை கைவிடப்பட்டுள்ளது

எப்.முபாரக்  2020-12-30
அனுராதபுரம் திருகோணமலை மாவட்டங்களின் எல்லைப் புறமான     தானக்குவெவ பகுதியில் செய்கை பண்ணப்பட்டுள்ள சோளச் செய்கைகளில் படைப்புளுக்களின் தாக்கம் காரணமாக 25,000 ஆயிரம் ஏக்கர் சோளச் செய்கை கைவிடப்பட்டுள்ளதாக சோளச் செய்கையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
பல சிரமங்களுக்கு மத்தியில் பல ரூபாய்களை செலவு செய்து செய்கை பண்ணப்பட்ட சோளச் செய்கையில் கதிர் வரும் தருவாயில் ஒரு வகையான படைப்புளுக்களின் ஆதிக்கம் அதிகரித்தால் சோளக் கதிர்களுக்குள் புளுக்கள் ஊடுருவியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு வகையான எண்ணெய் வகைகளை விசிரியும் கட்டுப்படுத்த முடியாத நிலைலுள்ளது.
இவற்றினால் தாம் பல்வேறு வகையான இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருவதாகவும் இவற்றினை உரிய அதிகாரிகள் பார்வையிட்டு உரிய நஷ்ட ஈட்டினை பெற்றுத்தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.