மட்டக்களப்பில் மேலும் ஒரு கொரனா மரணம்.

(வேதாந்தி)
மட்டக்களப்பில் இன்றும்  கொரனா தொற்றினால் ஒருவர் மரணமடைந்துள்ளார்.மரணமடைந்தவர் 72 வயதுடைய   கொத்தியாபுலையைச்சேர்ந்த நபர் என தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 34ம்விடுதியில் தங்கிருந்து சிகிச்சை பெற்று வந்த நபரே மரணித்துள்ளார்.

மரணத்திற்கு பின் மேற்கொண்ட பரிசோதனையின்பின் இவருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவருக்கு குறிப்பிட்ட விடுதியில்தான் தொற்று ஏற்பட்டிருக்க வேண்டுமென சந்தேகிக்கப்படுகின்றது

இதனால் விடுதியினை மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பெரும்பாலும் விடுதி மூடப்படலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்றுனால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டாகவும்,கிழக்கில் ஆறாகவும் அதிகரித்துள்ளது.