மன்னாரில் ஆற்றில் குளிக்கச் சென்ற கிராம அலுவலகர் ஒருவரைக் காணாது தேடுதல்

( வாஸ் கூஞ்ஞ)

மன்னார் நானாட்டன் பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த கிராம அலுவலகர் ஒருவர் தனது நண்பர்களுடன் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த வேளையில் காணாமல் போயுள்ளதால் அவரை ஆற்றில் கண்டுப்பிடிப்பதில் பலரும் தேடுதல் நடாத்திக் கொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ் சம்பவம் செவ்வாய் கிழமை (29.12.2020) இன்று பிற்பகல் முருங்கன் பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது மன்னார் சூரியகட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவரும் நானாட்டான் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தோமாஸ்புரி கிராம அலுவலகப் பிரிவில் கடமையாற்றுபவருமான ஜனார்த்தனன் (வயது 26) என்ற கிராம அலுவலகர் தனது நண்பர்களுடன் மன்னார் அரிவியாற்றில் குளிக்கச் சென்றுள்ளதாக ஆரம்ப விசாரனையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் குளித்துக் கொண்டிருந்தபொழது இவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்பொழுது இவரைத் தேடி ஆற்றில் தேடுதல் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ் தேடுதலானது பாதுகாப்பு படையினர் மதத் தலைவர்கள் மற்றும் பொது மக்களின் ஒத்துழைப்புடன் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தற்பொழது மன்னாரில் பெய்துவந்த மழை காரணமாகவும் மல்வத்தோயாவிலிருந்து நீர் வந்தமையாலும் கட்டுக்கரைக்குளம் நிரம்பியுள்ளதால் இவ் அருவியாற்று மூலம் வரும் வரத்து நீர் கட்டுக்கரைக்குளத்துக்கு வருவதை தடைசெய்து கடலுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதால் இவற்றை கவனத்தில் எடுக்கப்பட்டே காணாமல்போன கிராம அலுவலகர் இவ் ஆற்றில் தேடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆற்றின் சுழிக்குள் அகப்பட்டே இவர் காணாமல் போயிருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.