கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்து வருவதன் காரணமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பகுதிகளிலிருந்து மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்துவது மற்றும் அப்பகுதிகளிலிருந்து வரும் மக்களை கண்காணிப்பது தொடர்பில் இங்கு ஆராயப்பட்டது .
குறிப்பாக காத்தான்குடி பகுதிகளில் தற்போது கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக அங்கிருந்து வரும் வர்த்தகர்களைக் கட்டுப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுப்பவர்கள் மாநகருக்குள்ளேயே தங்கியிருந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட அனுமதிப்பது எனவும் தங்குமிட வசதிகள் இல்லாதவர்களை மாநகரத்திற்குள் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தற்காலிகமாகத் தவிர்த்துக்கொள்வது எனவும் இங்கு தீர்மானிக்கப்பட்டது .
காத்தான்குடியில் இருந்து வர்த்தக நிலையங்களுக்கு வருகை தருபவர்கள் சுகாதார பரிசோதகர்களின் அறிவுறுத்தலின் படி இங்கேயே தங்கி இருந்து கடைகளை திறக்கவேண்டும் எனவும் அல்லாதுவிடின் நகருக்குள் வசிக்கும் ஊழியர்களைக் கொண்டு வியாபார நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் பணிக்கப்பட்டுள்ளதாக இதன்போது மாநகர முதல்வர் தெரிவித்தார்.
மேலும் வர்த்தக சங்கம் இதற்கான பூரண ஒத்துழைப்பினை வழங்கவேண்டும் என்றும் இங்கு தங்குபவர்களுக்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதோடு அது தொடர்பில் இன்று மாலைக்குள் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் களவிஜயம் செய்து உறுதிப்படுத்தியதன் பின்னர் அவரது வியாபார செயற்பாடுகளுக்கு மாநகரசபை அனுமதி வழங்கும் என்றும் தெரிவித்தார்