கஸ்ரப்படும் மக்களுக்கு கை கொடுக்கும் இறாஜங்க அமைச்சர்.

 

(எருவில் துசி) வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பின்தங்கிய குடும்பங்களுக்கு நேற்று(28) மாலை
பிரதேச செயலகத்தில் வைத்து பெட்டை ஆடுகள் வழங்கிவைப்பு.

கிராமிய அபிவிருத்தி பின்தங்கிய பிரதேச மனைசார் கால் நடைவளர்ப்பு சிறு பொருளாதார பயிர்செய்கை
மேம்பாட்டு இறாஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் அவர்களின் அமைச்சின் ஊடாக பாதிக்கப்பட்ட மக்களை
இனங்கண்டு அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்வடைய செய்யும் நோக்கில் நேற்று மாலை 05.00 மணியளவில்
பிரதேச செயலாளர் இ.ராகுலநாயகி அவர்களின் தலைமையில் பிரதேச செயலகத்தில் வைத்து 51 குடும்பங்களுக்கு
30.000 ரூபா பெறுமதியான பெட்டை வளாப்;பாடுகள் வழங்கிவைக்கப்பட்டது.

இறாஜாங்க அமைச்சரின் போரதீவுப்பற்று முதன்மை பிரதான இணைப்பாளர் பா.தனஞ்சயன் அவர்களின் முழுமையான
பங்குபற்றுதலுடன் பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டு வாழ்வாதார ரீதியாக கஸ்ரப்படுகின்ற குடும்பங்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.
மேலும் ஏதிர்காலத்தில் அமைச்சரின் அமைச்சின் ஊடாக கால் நடைகள் மற்றும் மலசல கூடவசதிகள் ஏற்படுத்தி
மக்களின் வாழ்வில் பொருளாதார ரீதியாக முன்னேற்றுவதற்கு அமைச்சு பல ஆக்கபூர்வமான பணிகள் மெற்கொள்ளப்படவுள்ளதாக
அமைச்சரின் இணைப்பாளர் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.

நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன்,கணக்காளர் அம்பிகாவதி, உதவி திட்டமிடல் பணிப்பாளர் சசிகரன் கால் நடை வைத்திய அதிகாரி பட்டிப்பளை பிரதேச அமைச்சரின் இணைப்பாளர்
வை.சந்திரமோகன் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அமைச்சின் இணைப்பாளர்கள் பயனாளிகள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.