கல்முனை பிரதேசத்தில் இரவு இரவாக எடுக்கப்படும் எழுமாற்றான கொரோனா பரிசோதனைகள்

பாறுக் ஷிஹான்

கொரேனா நிலைமையை கல்முனை மாநகர எல்லைப்பகுதியில்  கட்டுப்படுத்தும் வகையில் எழுமாற்றாக எடுக்கப்பட்ட  பரிசோதனையில்   அதிகமான  கொரோனா தொற்றாளர்களாக இணங்காணப்பட்டதை தொடர்ந்து மேலும் கொரோனா பரவலை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருவதற்கும் தொற்றாளர்களை இணங்காண்பதற்காகவும்  பொது இடங்களில் பரிசோதனைகள் சுகாதார பிரிவினரால் இராணுவத்தினரின் துணையுடன் மேற்கொள்ளப்பட்டன.

இன்று(28) இரவு பெற்றோலிய நிலையங்களில் தற்காலிக சிகிச்சை கூடம் ஏற்படுத்தப்பட்டு குறித்த பரிசோதனைகள் யாவும் மேற்கொள்ளப்பட்டதுடன் ஆர்வத்துடன் பலரும் கலந்து கொண்டனர்.

கல்முனை பிரதேசத்தில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா தொற்று சூழ்நிலையை கருத்திற்கொண்டு இன்று(28)இரவு 8.30 மணியில் இருந்து மறு அறிவித்தல் வரை மேற்குறித்த பகுதிகளில் போக்குவரத்து செய்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.