24ம் திகதி அன்ரிஜன் பரிசோதனை செய்தவருக்கு இன்றைய பரிசோதனையில் கொரனா தொற்று மட்டில் சம்பவம்.

மட்டக்களப்பில் கடந்த 24ம் திகதி அன்ரிஜன் பரிசோதனை மேற்கொண்டு தொற்று உறுதிப்படுத்தப்படாத நபர் இன்று  கொரனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

தொற்றுக்குள்ளானவர் காத்தான்குடியைச்சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட நபர்  மட்டுபோதனா வைத்தியசாலையில் குறிப்பிட்ட விடுதியொன்றில் சிகிச்சை பெற்றுவந்தவதெனவும் இவர் விடுதியிலிருந்து வீட்டுக்கு சென்ற நிலையில் திடிர் சுகயினமுற்ற நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையின் அவசரசிகிச்சைப்பிரிவில் அனுமதிப்பட்டபோது மேற்கொண்ட பரிசோதனையில் கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவரை சிகிச்சைக்காக அழைத்து வந்தவர்  தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.