அனாமிகா அஞ்சலியும் அமரர்ஆனந்தன் 25 வது ஆண்டு நினைவும்

அனாமிகா அஞ்சலியும் அமரர்ஆனந்தன் 25 வது ஆண்டு நினைவும் கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பில் பேராசிரியர் செ.யோகராசா தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் . க. கருணாகரனும் சிறப்பதிதியாக மாநகரசபை ஆணையாளர் திரு. மா. தயாபரன் அவர்களும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் மட்டக்களப்பின்தொன்மையும்தொடர்பாடலும் தமிழை மையப்படுத்திய ஒரு வரலாற்று நோக்கு என்ற தலைப்பில் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன உதவிப்பணிப்பாளர் கலாநிதி ஸ்ரனிஸ்லாஸ் மோசஸ்   நினைவுப் பேருரை வழங்கினார்.

அனாமிகா நினைவு விருது 2020 பல்கலைச்செம்மல் ஆறுமுகம் ஸ்ரீதரனுக்கு வழங்கப்பட்டது.  ஆனந்தன்எனும்அற்புதம் எனும் நூல் அறிமுகத்தை                                         த. தேவகாந்தன்  வழங்கியதுடன்

ஒருமரபின்நீட்சி  நூல் அறிமுகத்தை கிழக்குப் பல்கலைக்கழக. நுண்கலைத்துறை தலைவர்  திரு. கு. ரவிச்சந்திரன் வழங்கினார். இந்நிகழ்வில் ஆனந்தன்பற்றியசிறப்பு உரையினை முருகு தயானந்தன்  வழங்கினார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.