திருகோணமலை மாவட்டத்தில் கடும் அடை மழை

ஹஸ்பர் ஏ ஹலீம்_
திருகோணமலை மாவட்டத்தில் பல பகுதிகளிலும் இன்று (27) காலை தொடக்கம் தற்போது வரை பெய்த கடும் அடை மழை காரணமாக தாழ் நிலப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் குடியிருப்பு வீடுகளுக்குள்ளும் நீர் உட்சென்றுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் வீதியோரங்கள் வெள்ளக்காட்சிகளாகவும் காணப்படுவதனையும் அவதானிக்க முடிகிறது.திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வரோதய நகர், புதுக்குடியிருப்பு, அன்புவெளிபுரம், அபயபுரம் , கிண்ணியா,முள்ளிப்பொத்தானை உட்பட பல பிரதேசங்களிலும் இந்த நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதன் காரணமாக மக்களின் அன்றாட இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.