ஜோசப்பரராஜசிங்கம் தமிழ் மண்ணையும் தமிழ் மக்களையும் நேசித்தது குற்றமா?

படுகொலை செய்யப்படும் அளவிற்கு என்ன தவறுசெய்தார்??

இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித்தலைவர் லோ.தீபாகரன்

யாழ்பாணத்தில் 1934 நவம்பர் 26 ம் திகதி பிறந்த ஜோசப்பரராஜசிங்கம் ஐயா கிழக்குமாகாணத்தில் எமது மட்டக்களப்பு மாவட்டத்தில் திருமணம் முடித்து மட்டு மண்ணில் பாராளுமன்ற உறுப்பினராக வாழ்ந்ததுடன் வடக்கு கிழக்கிற்கு இணைப்பு பாலமாகவும் திகழ்ந்தார் என இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித்தலைவர் லோ.தீபாகரன் தெரிவித்தார்.

படுகொலை செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின்15வது நினைவு தினம் கடந்த வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் மாவட்ட இளைஞர் அணியின்  ஏற்பாட்டில்நடைபெற்றபோது அவர் தனது தலைமையுரையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவரின் உரையின் முழுவடிவம்.
இந்த மாமனிதர் கடந்த 2005 ம் ஆண்டு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து நத்தார் ஆராதனை வேளையில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார் இவ்வாறு சமூக ஊடகங்களில் சில கருத்துக்களை காணக்கிடைத்தது வருங்காலத்தில்  வரலாற்றை மாற்றி விடுவார்களோ என ஐயம் ஏற்படுகின்றது
2005 இவர் சில கயவர்களால் படுகொலை செய்யப்பட்டதில் இருந்து சந்தேகத்தின் பெயரில் பலரை கைது செய்தனர்  நீதிக்காக நாம் போராடிக்கொண்டிருக்கிறோம் ஆனால் இதுவரை அதற்கான நீதி கிடைக்காதது வேதனையான விடயம்
எம்மைப் போன்ற பல இளம் தலைவர்களுக்கு முன்னுதாரணமாக இவர் வாழ்ந்ததுடன் இலங்கை தமிழரசு கட்சியின் சிரேஸ்ர தலைவர்களில் ஒருவராக  செயலாற்றி எமது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கும்  முன்னின்று உழைத்த தலைவர்களுள் இவரும் ஒருவர். இவர் படுகொலை செய்யப்பட்ட பின் தமிழ்த் தேசிய விடுதலைக்காக அறவழியில் போராடிய அன்னாருக்கு மாமனிதர் விருது வழங்கப்பட்டது
கிழக்கில் இருந்த ஆளுமைமிக்க தலைவர்களை ஊடகவியலாளர்களை கல்விமான்களை கடத்தி காணாமல் ஆக்கிவிட்டு கொலை செய்து விட்டு அச்சுறுத்தி வடக்கு கிழக்கு பிரதேச வாதம் கதைத்து என்ன பயன் கண்டீர்கள்???
எவ்வாறு தலைவர்கள் உருவாகுவார்கள் ?? சிந்தித்து பாருங்கள்

நாம் இங்கு இவரை பற்றி சுட்டிகாட்ட வேண்டிய விடயம் ஆரம்பத்தில் ஆங்கில ஆசிரியராக தமது சமுக பணியை ஆரம்பித்த இவர் அறுபதுகளில் தமிழரசுக் கட்சி மூலம் அரசியலுக்கு நுழைந்த இவர் தான் பத்திரிகையாளராக பணியாற்றிய காலத்தில் தனது மனைவியார் பெயரில் (திருமதி சுகுணம் ஜோசப்) கட்டுரைகளை எழுதிவந்தார். மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரச்சினைகளை வெளிக்கொண்டுவர இவர் எழுதிய கட்டுரைகள் பல அப்பகுதியில் மிகவும் பிரசித்தமானவை.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பத்திரிகையாளர் அமைப்பு ஒன்றை ஏற்படுத்துவதிலும் முன்னின்றவர் இவர். அந்த அமைப்பின் ஆரம்பத் தலைவரும் இவரே என்பதுடன் பல மொழியறிவில் தேர்ச்சி பெற்றவர் இவர் என்பதில் ஐயமில்லை

மட்டக்களப்பில் 90ம் ஆண்டு இடம் பெற்ற  பல தமிழ் மக்கள் மீதான படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் சர்வதேத்திற்கு கொண்டு சென்ற மட்டக்களப்பன் ஒரே ஒரு தலைவர் இவர் ஆகும் இது இவரின் சாணக்கிய அரசியலையும் மொழி பாண்டித்தியத்தையும் காட்டுகின்றது

குறிப்பாக படுவான்கரை பெருநிலத்தில் கடந்த 1991 யூண் 12ம் திகதி மகிழடித்தீவில் இடம்பெற்ற படுகொலையை சர்வதேச ரீதியாக வெளிக்காட்டியது மட்டுமன்றி அதற்கான ஒரு ஆணைக்குழுவை இலங்கை அரசாங்கத்தால் அமைப்பதற்கு அழுத்தம் கொடுத்தவரும் இவரே

இங்கு எம்மத்தியில் ஏழும் கேள்வி இவர் படுகொலை செய்யப்படும் அளவிற்கு என்ன தவறுசெய்தார்??
தமிழ் மண்ணை நேசித்தத குற்றமா??
தமிழ் மக்களை நேசித்தது குற்றமா??

இவ்வாறான மறைந்த தலைவர்களின் வரலாறுகள் தியாகங்கள் இன்றைய இளம் தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டும் எமது கட்சி மாத்திரம் தான் கட்சி வளர்ச்சிக்கும் மக்கள் சேவைக்காகவும் பல தியாகங்களுக்கு அப்பால் உயிரையும் தியாகம் செய்கின்றனர்.

இவ்வாறான ஒரு மாமனிதரை இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியால் கடந்த 2012இம் ஆண்டு தொடக்கம் இதே நத்தார் நாளில் இருந்து நாம் நினைவு கூர்ந்து வருகின்றோம்.
எதிர்கால எமது அரசியல் இருப்புக்காகவும்  நிரந்தர அரசியல் தீர்வுக்காகவும்  உயிர் நீத்தவர்களை நாம் நினைவுகூருவதற்கு கடமைப்பட்டுள்ளோம் அவரை போன்று எம் மண் விடியலுக்காக உயிர்நீத்த அனைவரையும் நாம் நினைவுகூரும் போது அவர்களின் தியாத்தின் பதிவுகள் எமது இளைய சந்ததிகளுக்கு வரலாற்றை மீட்பதற்கு ஒரு வாய்பாக அமையும்.

இறுதியாக இன்றைய சில அபிவிருத்தியை மட்டும் நேசிக்கும் இளைஞர்களே
யார் இந்த ஜோசப்பரராஜசிங்கம்??
ஏன் இவர் கொல்லப்பட்டார் ??
தமிழ்தேசிய போராட்டம் என்னறால் என்ன??
தமிழர் போராட்டத்தில் இவர் பங்களிப்பு என்ன?
துரோகம் என்றால் என்ன??
தலைவன் என்றால் யார்??
வீரம் என்றால் என்ன ??
வரலாற்றை கொஞ்சம் தேடிப்பாருங்கள் என்று கூறி
கைவிரித்து வந்த கயவர்
நம்மிடை பொய்விரித்து
நம்புலன் மறைத்து
தமிமழுக்கு விலங்கிட்டு
தாயகம் பற்றி நமக்குள்ள உரிமை தம்க்கேன்பர் – ஒரு கவிஞன்
இது தான் இன்றைய அபிவிருத்தி அரசியல்
பண்ணை அபிவிருத்தி என்கிறார்கள் – மேச்சல் தரை பறி போகிறது
விவசாய அபிவிருத்தி என்கிறார்கள் – வாயல் நிலங்கள் பறிக்கப்படுகின்றன
மட்டக்களப்பில் மீன்பிடி அபிவிருத்தி  என்றார்கள் – மீன்வளம் பெருகும் மாந்தீவும் பறிபோகிறது
வளங்களை கொண்டு தொழிற்சாலை என்றார்கள் – வளங்கள் பிற மாவட்டம் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது
எமது கோயில்களில் நாம் வழிபாடு நடாத்த மாற்றானிடம் அனுமதி கேட்பதா அபிவிருத்தி
எமது தமிழ் தேசியக்கூட்டமைப்பானது என்றுமே எம் மக்களின் அபிவிருத்திக்கு தடையில்லை நாம் கேட்பது உரிமையுடன் கூடிய அபிவிருத்தியே என்று கூறி

இன்றய மாமனிதர் ஜோசப்பரராஜசிங்கம் ஐயா அவர்கள் உயிர் நீத்த 15வது ஆண்டு நினைவுநாளில் அவருக்கக அஞ்சலி வணக்கம் செலுத்தும் நாம் அவர் விட்டுச்சென்ற உறுதி உண்மை உணர்வு தியாகம் என்பவற்றை நாமும் அவர் போன்று கடைப்பிடித்து மேற்கொள்வதே அவருக்கு நாம் செலுத்தும் அஞ்சலியாகும்.

இந்த உன்னத பணியை எமது வாலிபர் முன்னணி எமது மூத்த உறுப்பினர்களின் எமது தமிழ்தேசிய கூட்டமைப்பு தலைமையுடன் இணைந்து செயல்படுவோம் என்பதையும் கூறுவதில் பெருமை படுகின்றோம்

எமக்கேன்று தேசியம் அமைத்திடுவோம்
அது தமிழ் தேசியமாக இருக்கட்டும்
அதில் துரோகிகளும் துரோகங்களும் இல்லாதிருக்கட்டும்
அன்றே மலரும் தூய தமிழ் தேசியம்