கொரனா ஒன்றும் கொடிய நோய் அல்ல மக்கள் அவதானமாகவும் நிதானத்துடன் செயற்பட்டால் கட்டுப்படுத்தமுடியும்

மட்டு அரசாங்க அதிபர்

கொரனா ஒன்றும் கொடிய நோய் அல்ல மக்கள் அவதானமாகவும் நிதானத்துடன் அன்றாட நடவடிக்கைகளை மேற்கொண்டால் நமது மாவட்டத்தில் கொரனாவை கட்டுப்படுத்தமுடியுமென மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.

கடந்த சில தினங்களாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கொரனா தொற்று அதிகரித்துள்ளமையால் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
 அவர் தொடர்ந்து மேலும் கருத்து தெரிவிக்கையில் தற்போது நமது மாவட்டத்தில் தொற்று அதிகரித்துள்ளமை கவலையளிக்கின்றது.
இந்நிலமை தொடர்ந்து நீடிக்கவிடக்கூடாது பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை கடைப்பிடிப்பதுடன் கொரனா சட்டதிட்டங்களை கடைப்பிடிக்க வேண்டும்.
 சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்படும் பீ.சீ.ஆர்  அன்ரிஜன் பரிசோதனைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குவதுடன் தேவையில்லாத நடமாட்டங்களை குறைப்பதும் பயனளிக்கும்செயல்.
அத்துடன் நமது மாவட்ட திணைக்களத்தலைவர்களும் இது விடயத்தில் கூடிய கவனமெடுத்து செயற்படவேண்டும்.
இத்துடன் நமது வர்த்தகர்களும் இவ்விடயத்தில் கூடிய கவனம் செலுத்தி தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்றார்.