16வருட வறண்ட வரலாற்று நினைவும் சிரமதானப்பணியும்.

(எருவில் துசி) ஆழிப்பேரலை அணர்த்தத்தில் உயிர் பறிக்கப்பட்ட உறவுகளை மீட்டிப்பார்க்கும் அஞ்சலி நிகழ்வும் அதனை தொடர்ந்து
சிரமதானப்பணியும் எருவில் லுருமு அமைப்பினரால் இன்று(26) சனிக்கிழமை அதன் தலைவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

சுனாமி பேரலையின் தாக்கம் நடைபெற்று 16 வருடங்கள் கடந்த நிலையி;ல் அதன்தாக்கத்தில் இருந்து உயிர் துறந்த
உறவுகளை நினைந்து அவர்களின் ஆத்மா சாந்தி வேண்டியும் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வு கருதியும் எருவில்
இளைஞர் கழகம் கண்ணகி விழையாட்டுக்கழகம் உதய நிலாக் கலைகழகம் என்பன இணைந்து அஞ்சலி செலுத்தியதுடன்
பாதிக்கப்பட்டவர்களின் நிறைவான வாழ்வுக்கு இறைவனை பிராத்திக்றும் வகையிலும் எருவில் இளைஞர் கழக பொது
நூலக முன்னறலில் நடைபெற்றது அதனை தொடர்ந்து தற்போது பெய்து வரும் மழைகாரணமா டெங்கு நுளம்பின்
உற்பத்தியினை கட்டுப்படுத்தும் முகமாகவும் கிராமத்தின் சுத்தம் கருதியும் ஆலயங்கள் பொது இடங்கள் மங்ஞம் வீதி ஓரங்களில்
காணப்பட்ட குப்பைகள் என்பன சிரமதாணம் மூலம் சுத்தம் செய்யப்பட்டது.

நிகழ்வில் பிரதேச சபையின் சுகாதார தொழிலாழிகள் மற்றும் உழவு இயந்திரம் என்பன குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டதுடன் பொது சுகாதார பரிசோதகர் பிரதேச இளைஞர் சேவை உத்தியோகத்தர் கிராம சேவையாளர்
ஆலங்களின் தலைவர்கள் என பலர் கலந்து கொன்டமை குறிப்பிடத்தக்கது.