காத்தான்குடியில் முதலாவது கொரனா மரணம் பதிவாகியது.

மட்டக்களப்பு போதனாவைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த கொரனா தொற்றாளர் ஒருவர் சற்றுமுன் மரணமடைந்துள்ளார்.

மரணமடைந்தவர் நீண்டகால சிறு நீரக நோயாளி(CKD) என தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடி ஆறாம் குறிச்சியைச்சேர்ந்த 63 வயதான குறிப்பிட்டநபர் சிலநாட்களுக்கு முன்பு மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது மேற்கொண்ட பரிசோதனையில் கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.

தொடர்ந்தும் மட்டு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இவர் இன்று இரவு 18.45 மணியளவில் மரணமடைந்துள்ளதாக மட்டுபோதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

கிழக்கில் கொரனா தொற்றினால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 05 ஆக அதிகரித்துள்ளது.