முன்னாள் கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் காலமானார்

(எஸ்.அஷ்ரப்கான்)
கிழக்கு மாகாண கலாசார திணைக்கள முன்னாள் பணிப்பாளரும், முன்னாள் கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளரும் சிரேஷ்ட இலக்கியவாதியுமான
மணிப்புலவர் மருதூர் ஏ மஜீத் காலமானார்.

உடல் நலக் குறைவாக இருந்த அவர் இன்று (26) பி.ப.12. 30 மணியளவில் காலமானார்.

இரண்டு பிள்ளைகளின் தகப்பனான மணிப்புலவர் மருதூர்  ஏ.மஜீத்  நாடறிந்த சிரேஷ்ட இலக்கியவாதியாக திகழ்ந்தார்.
இவரது ஜனாஸா சொந்த ஊரான சாய்ந்தமருதில் நல்லடக்கம் செய்யப்பட்டது