கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பூட்டு -வைத்தியர் ஜி.சுகுணன்

அம்பாறை   கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு பூட்டு எதிர்வரும்  செவ்வாய்க்கிழமை (29)  வரை பூட்டப்பட்டுள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜி.சுகுணன் குறிப்பிட்டார்.

குறித்த பணிமனையில் கடமையாற்றும்  சாரதி  ,இரண்டு  மருத்துவ மாதுக்கள் உள்ளடங்கலாக   மூவர் இன்று (26)கொவிட் தொற்று உள்ளவர்களாக  காலையில் அடையாளப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் செவ்வாய்க்கிழமை(29)  வரை   மீண்டும் ஒரு முறை பரிசோதனை செய்யும் வரை பணிமனையின் சகல நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டு கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை மூடப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.