அம்பாறை மாவட்ட இளைஞர் விருதுப் போட்டி -2020

பீ.எம்.றியாத்
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சு மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வருடாந்தம் நடாத்தப்படும் இளைஞர் மாவட்ட மட்ட விருதுப் போட்டி எதிர்வரும் 27/12/2020 திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணிக்கு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் கங்கா சாதுரீக்க தலைமையில் நடைபெறும்.

நிகழ்வானது பொதுப் போட்டி மற்றும் ஆங்கில மொழிப் போட்டி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தின் யெவுன் நிக்கேதன கூட்டம் மண்டபத்திலும் தமிழ் மொழிப் போட்டி
1. அறிவிப்பாளர்
2. பேச்சுப் போட்டி
3. இளம் பாடகர்
4. கிராமியப் பாடல் தனி
5. சாஸ்திரிய பாடல் தனி
6. சாஸ்திரிய வாத்தியம்
சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்திலும் சுகாதாரம் முறைப்படி நடைபெறுவதுடன் இப்போட்டிகளுக்காக ஏற்கனவே விண்ணப்பத்தை ஒப்படைத்த மற்றும் ஒப்படைக்காத அனைவரும் கலந்து கொள்ள முடியும் என அம்பாறை மாவட்ட இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் அலியார் முபாரக் அலி தெரிவித்தார்.