காத்தான்குடியில் மேலும் ஒரு கொரனா தொற்றாளர். மட்டில் உணவகத்திற்கும் சீல் வைப்பு.

காத்தான்குடி பிரதேசத்தில் மேலும் ஒரு கொரனா தொற்றாளர் இன்று பிற்பகல் இனம் காணப்பட்டுள்ளார். தொற்றுக்குள்ளானவர் இன்று காலை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் தொற்றுக்குள்ளானவரின் குடும்ப உறுப்பினர் எனபிராந்தியசுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன்தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளானவர் தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவகின்றார்.

இதேவேளை பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர் உணவருந்திய மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் உள்ள ஒரு உணவகமும் தற்காலிகமாக சீல் வைக்கப்பட்டுள்ளது.இங்கு கடமைபுரியும் 12 ஊழியர்களுக்கும் நாளை காலை அன்ரிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபின்பே உணவகத்தை திறப்பதற்கான முடிவு மேற்கொள்ளப்படும் என கோட்டைமுனை பிரதேச சுகாதாரப்பரிசோதகர் தவராஜா மிதுன்ராஜ் தெரிவித்தார்.