மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகள் நாளை வழமைக்கு.15பேர் தனிமைப்படுத்தலில்

மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நடவடிக்கைகள் வழமைபோன்று நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சிலகாலங்களுக்கு வெளிமாவட்ட ஊழியர்களை பணிக்கு அழைப்பதில்லையென தீர்மானித்துள்ளதாக கூட்டுத்தாபன தகவல்கள் தெரிவிக்கின்றன.

15ஊழியர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

கூட்டுத்தாபனத்தின் ஊழியர் ஒருவர் தொற்றுக்காரணமாக இறந்ததன் காரணமாக இன்று 97பேருக்கு மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரியினால் மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் ஒருவருக்கு தொற்றுக்கான  அறிகுறிகள் தென்பட்டபோதிலும் பீ.சீ.ஆர் பரிசோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர் காத்தான்குடி 3ம் குறிச்சையைச்சேர்ந்த 46 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

ஏற்கனவே தொற்றுக்குள்ளாகி இறந்தவர் இறுதியாக 20ம் திகதி கடமைக்கு வந்து திரும்பியுள்ளதாகவும்.இன்று தொற்றுக்குள்ளானவருக்கும் இறந்தவருக்கும் எந்தவித நேரடி தொடர்பு இல்லையெனவும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது தொற்றுக்குள்ளாகிய நபருக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதற்கான மூலத்தை கண்டறிய சுகாதார அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இது சம்பந்தமாக மட்டக்களப்பு பொலிசாரும் இன்று மட்டக்களப்பு  பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.