94பேருக்கு இன்று அன்ரிஜன் பரிசோதனைகள்
மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர் ஒருவர் கொரனா தொற்றினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நேற்று இரவு 8.00 மணியளவில் மரணமடைந்ததையடுத்துகூட்டுத்தாபன ஊழியர்கள் ஒன்பது பேர் சுயதனிமைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை இருகட்டங்களாக மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபன ஊழியர்களுக்கு அன்ரிஜன் பீ.சீ.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுகாதார அதிகாரியொருவர் தெரிவித்தார்.
கூட்டுத்தாபனத்தில் பணிபுரியும் 94 ஊழியர்களுக்கும் இன்று பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டபின்பே கூட்டுத்தாபனத்தின் இயக்கம் பற்றி தெரிவிக்க முடியுமென கூட்டுத்தாபன அதிகாரியொருவர் தெரிவித்தார்.
இருப்பினும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் இராணுவத்தினருக்கும் எரிபொருட்கள் வழங்கக்கூடிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் கூட்டுத்தாபன அதிகாரியொருவர் தெரிவித்தார்.