வெல்லாவளி பொலிஸ் பிரிவில் மூன்றாவது தொற்றாளர் இனம் காணப்பட்டுள்ளார்

(வவுணதீவு  எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ்பிரிவுக்குட்பட்டபாலமுனை மண்டூர் பிரதேசத்தில் 64 வயதுக்குட்பட்ட பெண்ணொருவர் கொரனா தொற்றுக்குள்ளானதாக வியாழக்கிழமை (24)கண்டறியப்பட்டுள்ளார்.

குறித்த பெண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ஒப்பந்த அடிப்படையில் சுத்திகரிப்பாளராக பணிபுரிந்து வந்த நிலையில் அவர் தனது சொந்த இடமான அவரின் வதிவிடத்திற்கு வந்து இருந்தார் பின்னர் வெல்லாவெளி பொதுசுகாதாரபரிசோதகரிகளினால் குறித்தபெண் அவரின் குடும்பத்தினர் 14 நாட்கள் தனிமைப்படு்த்தப்பட்டு இவருக்கான பிசிஆர் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்து இந்த பரிசோதனையில் குறித்தபெண்ணுக்கு கொரனா தொற்று உறுதி்ப்படுத்தப்பட்டுள்ளது.
இச்சம்பவத்தை கருத்தில்கொண்டு வெல்லாவெளி பொலிசார் மற்றும் பொதுசுகாதாரப் பரிசோதகர்கள் மண்டூர் பிரசே சமக்களின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அவர்களுக்கான அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்