காத்தான்குடியில் இன்று இருவருக்கு கொரனா தொற்று. எண்ணிக்கை 06ஆக அதிகரிப்பு.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இன்று இருவர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மட்டு போதனா வைத்தியசாரையில் 16ம் விடுதியில் கடந்த நான்கு நாட்களாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த காத்தான்குடி 6ம் குறிச்சியைச்சேர்ந்த 64வயதுடைய நபரொருவர் இன்று 34ம் விடுதிக்கு மாற்றப்பட்டு  அன்ரிஜன் பரிசோதனையுடன் பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொண்டதில்  குறிப்பிட்ட நோயாளிக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் அவருக்கு உதவியாளராக பணியாற்றிய இன்னுமொரு காத்தான்குடியைச்சேர்ந்த நபருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி காத்தான்குடியில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 06ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை விடுதியில் கடமையாற்றிய உத்தியோகத்தர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.