கற்கை நெறியினை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கிவைப்பு!

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு விசுவமடுப்பகுதியில் பெரண்டினா தொழில்வள நிலையம் மற்றும்  Child first UK ஆகிய நிறுவனங்களின் நிதிப்பங்களிப்பில் DMI கணணி கல்வி நிலையத்தினால் soft skill development   கற்கை நெறியினை பூர்த்தி செய்த 27 மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு விசுவமடு CFCD  திறன் விருத்தி நிலையத்தில் 23.12.2020 அன்று நடைபெற்றுள்ளது

பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் அவர்களும் சிறப்பு விருந்தினராக பெரண்டினா நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் மற்றும் மாவட்ட இளைஞர் அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் திரு ஸ்டெவின் , CFCD நிறுவனத்தின் பணிப்பாளர் திரு யோகநாதன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளதுடன் பயிற்சினை நிறைவு செய்த மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி கௌரவித்துள்ளார்கள்

இப்பயிச்சித் திட்டத்துக்கென பெரண்டினா தொழில்வள நிலையத்தினால் 350000 ரூபாவும்    Child first UK நிறுவனத்தினால் 250000 ரூபாவும் செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது